இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல். [ 3. Jul. 2009 - 06:54]
தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது
மலேசியத் தமிழர் போராட்டமும் ஈழத் தமிழர் போராட்டமும் ஒன்றா? [12. Dec. 2007 - 06:54]
மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். read more
பேச்சுவார்த்தை என்பது யுத்தத்தில் பின்னடைவு அல்ல. [29. Nov. 2007 - 03:30]
யுத்த தர்மம் என்று சொல்வார்கள். அடிதடி, வெட்டுக் குத்தே ஆனாலும் அதிலும் சில தர்மங்கள் கடைப்பிடிப்பது என்பது மரபு. பண்டைக்காலத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் இதெல்லாம் உண்டு. ராணுவச் சட்டதிட்டங்களிலேயே இருக்கிற விஷயம். போர்க்களத்தில் மருத்துவப் பணி புரிய வருகிறவர்கள், செய்தி சேகரிக்க வருகிறவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அப்பாவி மக்கள் மீது ஆயுதப் பிரயோகம் கூடாது. யுத்தத்தில் நேரடியாகப் பங்குபெற்று ஆயுதம் ஏந்தாத சிவிலியன் அதிகாரி களைத் தாக்கக்கூடாது. இன்னும் சொல்லலாம் பெரிய பட்டியல்.
வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? [14. Nov. 2007 - 07:11]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் தமிழ் குரூரமாகச் சிதைக்கப்படுகிறது...'' என்று வேதனைப்பட்டவர்.. தலைவர்! [ 8. Nov. 2007 - 03:51]
ஏப்ரல் 10-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை யாளர் சந்திப்பு, ஏழேமுக்கால் மணிக்கு எந்த அசம்பாவிதமுமின்றி முடிவடைந்தது. பத்திரிகையாளர்கள் அவரவருக்குரிய வசதிகளை பயன்படுத்தி, உலகுக்குச் செய்தியை அனுப்பிவைக்கும் முயற்சிகளில் தீவிரமாயினர். நான் சென்ற பணி இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது.
கிமு 101ஆம் ஆண்டு... அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு இலங்கைத் தீவின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்த தமிழ் மன்னன் எல்லாளன் தெற்கில் இருந்து படையெடுத்து வந்த சிங்கள மன்னனாகிய துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்படுகிறான். 72 வயது நிரம்பிய எல்லாளனிற்கும் இளைஞனான துட்டகைமுனுவிற்கும் இடையில் நடந்த தனிச் சண்டையில் எல்லாள மன்னன் வீரச் சாவு அடைகிறான்.
அதிசய மனிதர் பிரபாகரன்(Pirabakaran phenomenon) என்கின்ற ஆக்கத்தின் சுருக்க மொழியாக்கம் இதுவாகும். ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர்.
‘அவாள்கள்’ போட்ட அணுசக்தி ஒப்பந்தம் [ 6. Oct. 2007 - 16:22]
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்? யார்? - இது ஒரு முக்கியமான கேள்வி. உயர்மட்ட பார்ப்பன அதிகாரிகள், அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்களாக இந்தியாவுக்குள் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் யார்?
துரோகிகளுக்குத் துரோகம் தரும் பரிசு(!) [ 3. Oct. 2007 - 03:51]
உலகில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள், தம்மை அடக்க முயலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற அதே வேளையில், தம்மிடையே தோன்றியிருக்கின்ற துரோகிகளுக்கு எதிராகவும் போராடியிருப்பதையும், போராடி வருவதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும், அந்த விடுதலைப் போராட்டத்தை அழிக்க முனைபவர்கள் அடிப்படையாகச் செய்கின்ற காரியம் என்னவென்றால், அந்தப் போராட்டத்திற்குள்ளேயே துரோகிகளையும், துரோகக் குழுக்களையும் உருவாக்குவதுதான்!
நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.